Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க சிறையில் வாடும் இந்தியர் : காப்பாற்ற குடும்பத்தினர் வலியுறுத்தல்!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (15:50 IST)
இந்தியாவை சேர்ந்த பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான் கற்பழிப்பு குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'அடிப்படை ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீத ு, அவரது தரப்பு நியாயங்களைக்கூற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும ்,' என்று ஆனந்தின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவரது தாய் சாசி ஆப்ரஹாம ், சகோதரி சஞ்சனா ஆகியோர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
இந்திய குடிமகனான ஆனந்த் ஜான் மீது ஆதாரமற்ற வகையில் கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்ட ு, சட்டவிரோதமாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனிமையில் விலங்குகள் பூட்டப்பட்டு தற்போது மனிதனுக்குரிய உணர்ச்சியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவர் குற்றமற்றவர் என்பதற்கான இ-மெயில ், புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த குற்றத்திற்கு காரணம ், அவரது வியாபார கூட்டாளிதான். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆனந்த் கைது செய்யப்பட்ட உடனேயே அவரது நிறுவனம் 10 மில்லியன் டாலர் மதிப்பிற்கு விலை போனது.
இந்த சம்பவத்தில் இந்திய அரசு தலையிட்டு ஆனந்தை காப்பாற்ற வேண்டும ். குறைந்தபட்ச பிணைய தொகைக்கு ஜாமீனில் விட வேண்டும். அப்போதுதான் அவரது தரப்பு நியாயத்தை கூற முடியும். ஆனந்த் குற்றவாளி அல்ல என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும ். இவ்வாறு உணர்ச்சி பொங்க அவர்கள் பேட்டி அளித்தனர்.
மேலும ், இதில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்த ி, ஆனந்தின் உறவினர்கள ், ஆதரவாளர்கள் நாளை ஜந்தர் மந்தர் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments