அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:44 IST)
அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் சுதிர் குமார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர்குமார் (31) அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் உள்ள டொயாட்டோ கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மர்ம மனிதர்கள் சிலர் சுதிர்குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 15 மாதங்களில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள் உட்பட 8 பேர் இதே போல் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளிகளைப் பற்றியோ, குற்றம் எதற்காக நடந்தது என்பது பற்றியோ எந்த விவரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments