Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த மீன் பஜ்ஜி செய்யவேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
முள் நீக்கிய மீன் - அரை கிலோ
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன் 
அரிசி மாவு - 1 ஸ்பூன் 
சோள மாவு - 2 ஸ்பூன் 
மைதா மாவு - 2 ஸ்பூன் 
எண்ணெய்  - தேவையான அளவு  
உப்பு  - தேவையான அளவு  
எலுமிச்சை பழச் சாறு  - சிறிதளவு 
  
செய்முறை:
 
முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி முள் நீக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, அத்துடன் மிளகாய்த் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 
 
சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றவும்.
 
எண்ணெய் காய்ந்ததும் ஊறவைத்துள்ள மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சுவையான மீன் பஜ்ஜி  தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments