Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மட்டன் குருமா செய்ய வேண்டுமா...!

Webdunia
தேவையான பொருட்கள் :
 
மட்டன் - ½ கிலோ
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
சோம்பு தூள் - ½ டீஸ்பூன்
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - சிறிதளவு
தயிர் - 3 டீஸ்பூன்
முந்திரி - 150 கிராம் (விழுதாக அரைக்கவும்)
சீரகம் - ½ டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 5
ஏலக்காய், மிளகு - ½ டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
தேங்காய் விழுது - 3 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்

 
செய்முறை :
 
தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டனை நன்றாக கழுவி  வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, பாதி அளவு தக்காளி, மஞ்சள் தூள், தயிர், மிளகாய்த் தூள்,  கொத்துமல்லி, கறிவேப்பிலை, முந்திரி விழுது, புதினா இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து, குளிர்சாதனப்  பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
 
குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சேர்த்து, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வதக்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இஞ்சி விழுது மற்றும் கறிவேப்பிலை  சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் தக்காளி மற்றும் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத் தூள், உப்பு சேர்த்து  பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அடுத்து அதில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து,  குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும். 
 
விசில் போனவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான மட்டன் குருமா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments