சூப்பரான டேஸ்டில் மீன் கட்லட் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மீன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டுவிழுது - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1 கொத்து
புதினா இலை - 1 கொத்து
ரஸ்க் தூள் - 4 (தூள் செய்யப்பட்டது
முட்டை - 4
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.
 
அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
 
ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி  பொரித்தெடுக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

பிறப்புறுப்பில் அரிப்புக்கான முக்கிய காரணங்கள்: இந்த தவறை எல்லாம் செய்யாதீர்கள்..!

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

அடுத்த கட்டுரையில்
Show comments