Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாவில் எச்சில் வரவழைக்கும் கனவாய் மீன் வறுவல் செய்ய..!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கனவாய் மீன் - கால் கிலோ
மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்னவெங்காயம் - 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 6
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் - 1 
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்
செய்முறை:
 
மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு  எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். 
 
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு,  சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காய்கறிகளை சமைக்காமல் உண்பாதால் கிடைக்கும் பலன்கள்..!

இளமையில் நரைமுடி பிரச்சனையா? இதோ ஒரு தீர்வு..!

ஆரோக்கியமான வாழ்விற்கு தினசரி செய்ய வேண்டிய முக்கிய விஷயஙகள்..!

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள் என்னென்ன?

டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பார்த்தால் வரும் நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments