இறால் பொடி செய்ய...!

Webdunia
தேவையானவை:
 
இறால் கருவாடு - 250 கிராம்
காய்ந்த மிளகாய் -  10
சின்ன வெங்காயம் - 7
பூண்டு - 8 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 200 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

 
 
செய்முறை:
 
கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். 
 
பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே  எடுத்துவைக்கவும். அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும்.
 
இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

அடுத்த கட்டுரையில்
Show comments