Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறால் பெப்பர் ப்ரை

இறால் பெப்பர் ப்ரை

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இறால் - 400 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு


 
 
செய்முறை:
 
* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.
 
* இஞ்சி, பூண்டு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
* ஒரு வாணலியை அடிப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
 
* பின்னர் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது. இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் இறால் பெப்பர் ப்ரை ரெடி. இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HMPV தொற்று கர்ப்பிணிகளை பாதிக்குமா?

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments