Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

Webdunia
பொருட்கள்:
 
பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம்
தக்காளி - ஒன்று 
வெங்காயம் - 2 
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1/4 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
முட்டை - 4
மிளகுத் தூள் - 1/4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
நெய் - 2 தேக்கரண்டி

 
செய்முறை:
 
பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பாதி அளவு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெந்ததும் பருப்பில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
 
ஒரு முட்டையுடன் மீதமுள்ள வெங்காயத்தில் பாதி அளவைச் சேர்த்து, மிளகுத் தூள், உப்பு மற்றும் சிறிதளவு மல்லித் தழை சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு பவுலில் மற்றொரு முட்டையை அடித்து தனியாக வைக்கவும்.
 
தோசைக் கல்லில் நெய் விட்டு, வெங்காயம் கலந்த முட்டைக் கலவையை ஊற்றி வேகவிட்டு எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள வெங்காயம் தாளித்து, குக்கரில் வேக வைத்த பாசிப்பருப்பில் கொட்டவும்.
 
வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்க்கவும். பிறகு தனியாக அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, மூடி போட்டு சிம்மில் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். சுவையும், மணமும் நிறைந்த பாசிப்பருப்பு பொரித்த முட்டை ரெடி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments