Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமத்து கோழி குழம்பு செய்ய..!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோழிக்கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 4
சிவப்பு மிளகாய் - 8
தனியா - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 1(முழு)
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமானால் சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை மற்றும் கிராம்பையும் போடவும். சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
 
வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி கோழிக்கறி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும்.
 
கறி நன்கு வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காயை போட்டு வதக்கி, கறி முழ்கும் அளவு நீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியாக  வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போடவும். சுவையான கிராமத்து கோழிக் குழம்பு தயார்.
 
குறிப்பு: தேங்காய் பதிலாக தேங்காய்ப் பாலும் ஊற்றி கோழி குழம்பு செய்யலாம். மிகவும் ருசியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments