Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருமையான சுவையில் இறால் ப்ரைட் ரைஸ் செய்ய !!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (16:22 IST)
தேவையான பொருட்கள்:
 
இறால் - அரை கிலோ
வடித்த சாதம் - 2 கப் (பாஸ்மதி அரிசி)
வெங்காயம் - சிறிதளவு  (மெல்லிதாக நறுக்கியது)
கேரட் - அரை கப்
பீன்ஸ் - கால் கப்
முட்டை கோஸ் - சிறிதளவு
குடைமிளகாய் - 1
வெங்காயத் தாள் - 1 கைப்பிடி
எலுமிச்சை சாரு - சிறிதளவு
தக்காளி சாஸ் - கால் ஸ்பூன்
சோயா சாஸ் -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு தூள் - கால் ஸ்பூன்

செய்முறை: 
 
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து 20 - 30 நிமிடம் ஊற வைக்கவும்.
 
பின்பு 1 வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு அதே வாணலியில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்கவும்.
 
காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சாஸ், மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும். வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
 
பின்பு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும். கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான இறால் ப்ரைட் ரைஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments