Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...!

Webdunia
தேவையானப் பொருட்கள்:
 
பாஸ்தா - ஒரு கப்
இறால் - கால் கப்
வெங்காயம் - 2
தக்காளி - 4 - 5
குடைமிளகாய் - ஒன்று
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
சில்லி ஃப்ளேக்ஸ் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 
செய்முறை: 
 
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து வைக்கவும். பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் தோல் நீக்கி தக்காளியை கூழாக அரைத்துக் கொள்ளவும்.
 
பாஸ்தாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டுத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு இறாலைச் சேர்த்து சில்லி ஃப்ளேக்ஸ் தூவி 2 நிமிடங்கள் கலந்துவிடவும். கடைசியாக வேக வைத்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு ஒன்று சேரக் கிளறி இறக்கவும். சுவையான ப்ரான் பாஸ்தா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

அடுத்த கட்டுரையில்
Show comments