Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சிக்கன் மிளகு குழம்பு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ 
மிளகு - 15
இஞ்சி - 1 துண்டு
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு 

செய்முறை:
 
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து  கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
 
கலந்து வைத்துள்ள இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்த்து தண்ணீரில் 10 நிமிடம் வேகவைக்கவும். கலந்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிக்கனை நன்கு வேகவைத்து இறக்கி வைக்கவும்.
 
பின் அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை  வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான சிக்கன் மிளகு குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments