Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருசியான கோங்குரா சிக்கன் செய்ய !!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (14:01 IST)
தேவையான பொருட்கள்:

புளிச்சக்கீரை -1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தனியா (கொத்தமல்லி விதைகள்) - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கோழிக்கறி - 250 கிராம் (வேக வைத்தது)
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய்  - 3
நெய் -1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்



செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளிச்சக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோழிக் கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும்போது இறக்கி பரிமாறவும். சூப்பரான கோங்குரா சிக்கன் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments