Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான முட்டை பிரியாணி செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பெரிய வெங்காயம் - 3 
கடைந்த தயிர் - 1 கப்
எண்ணெய் - அரை கப்
நெய் - கால் கப்
உப்பு - 2 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள்:
 
பட்டை - 2, லவங்கம் - 2, ஏலக்காய் - 6, பச்சை மிளகாய் - 5, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி.
 
செய்முறை:
 
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
 
* முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள்.  அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
 
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும். எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வெந்நீர் விட்டு தளதளப்பாக  இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி  கொதிக்கவிடுங்கள்.
 
* இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பரான முட்டை  பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

அடுத்த கட்டுரையில்
Show comments