Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் செய்ய !!

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்
Webdunia
தேவையான பொருட்கள்:
 
நாட்டுக்கோழி - ஒரு கிலோ
பெரியவெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகுதூள் - 4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
 

செய்முறை:
 
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக்கோழியை துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தால் தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும்.
 
விசில் போனவுடன் சிக்கனை எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை சூப் போல குடிக்கலாம் சளி நீங்கும். வெந்த சிக்கனை சின்ன சின்ன பீஸாக பிய்ந்து தட்டில்  வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும். இதனுடன் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி நன்றாக ப்ரை ஆகும் வரை வதக்கவும்.
 
பின்னர் சீரகத்தூள், பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம். சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல்  தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

உணவில் வெண்ணெய் சேர்ப்பது உயிருக்கு ஆபத்தை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments