சுவையான முறையில் மீன் கட்லெட் எப்படி செய்வது...?

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (13:00 IST)
தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ (முள் இல்லாத மீன்)
உருளைக்கிழங்கு - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
சீரகத்தூள், மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - கால் ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா - 1 கட்டு தேவையான அளவு
ரஸ்க் - 4 (தேவைக்கு ஏற்ப)
முட்டை - 2 (தேவைக்கு ஏற்ப)
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். இதன் பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனை மீன் கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பாத்திரத்தை உடைத்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் தோய்த்த பின், ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சுவையான மீன் கட்லெட் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments