Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி....?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நண்டு - அரை கிலோ
வெங்காயத் தாள் - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி
அஜினோ மோட்டோ - 1 சிட்டிகை
பால் - கால் கப்
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
* வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை  பொடியாக வெட்டி தனியாக வைக்கவும்.
 
* பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும். நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு  ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.
 
* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக  வதக்கிக் கொள்ளவும். 
 
* வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு  சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத்  தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும். சுவையான நண்டு சூப் தயார்.

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments