Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் தோசை செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
1. சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம்
2. சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி - 1
4. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
6. மிள்காய் தூள் - 2 டீஸ்பூன்
7. பச்சைமிளகாய் - 1
8. கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை
9. எண்ணெய், உப்பு - தேவைக்கு
10.முட்டை - 1
11.தோசை மாவு - 1 கப்
செய்முறை:
 
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளியை வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு  சுருண்டு வந்ததும் இறக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான சிக்கன் தோசை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments