Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சீரகசம்பா அரிசி - 1 கப் 
சிக்கன் - 250 கிராம் 
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
எண்ணெய் - 5 ஸ்பூன் 
நெய் - 1 ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 6
தயிர் - 3 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1/2 (சாறு எடுத்து கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு  
கொத்தமல்லி இலை - தேவையான அளவு 
புதினா இலை - தேவையான அளவு 

செய்முறை:
 
கடாயில் எண்ணெய்யை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி  பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 
பிறகு 10 நிமிடம் ஊறவைத்த மிளகாய் வற்றலை அரைத்து அத்துடன் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் சிக்கனை சேர்த்து வதக்கவும். அதோடு தயிர், புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
 
பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து தண்ணீர் விட்டு சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்து தண்ணீர் வற்றியதும் 2 கப் தண்ணீர் 10 நிமிடம் ஊறவைத்த அரிசி, கொத்தமல்லி, புதினா சேர்த்து குக்கரில் 1 விசில் வந்ததும் இறக்கவும். சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments