Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் கட்லட்

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (12:30 IST)
மீன் கட்லட் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இதை தயார் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு இது சிறந்த ஊட்டச்சத்தாக இருக்கும். குழந்தைகள் அதன் சுவையில் உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள்.



தேவையான பொருட்கள்

* மீன் – 1/2 கிலோ
* உருளைக்கிழங்கு – 2
* சின்ன வெங்காயம் – 100 கிராம்
* பச்சைமிளகாய் – 5
* சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
* மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
* மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
* இஞ்சி,பூண்டுவிழுது – 1/4 ஸ்பூன்
* மல்லி இலை – 1 கொத்து
* புதினா இலை - 1 கொத்து
* ரஸ்க் – 4
* முட்டை – 4
* எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* மீன் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

* அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

* மு‌ட்டையின் வெள்ளைக் கருவை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

* ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக  நமக்கு பிடித்த வடிவில் தட்டி, முட்டையில்  தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

* இப்பொழுது சுவையான மீன் கட்லட் தயார்.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments