Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி?

Webdunia
தேவையானவை:
 
சிக்கன் - 100 கிராம்
லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
வெங்காய தாள் - தேவையான அளவு

 
செய்முறை:
 
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்ஸை  வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக  வதக்கவும். பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.
 
சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, வெங்காய தாள் பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி  இறக்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கியத்தின் அற்புதம்: தமிழர் பாரம்பரிய உணவான பழைய சோறு!

இரவு உணவுக்கு பின் ஏலக்காய்: கிடைக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

காய்ச்சல், சளி, இருமல் குணமாக வீட்டில் தயாரிக்கப்படும் கஷாயம்..!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

'சைவ ஆட்டுக்கால்' முடவாட்டுக்கால் கிழங்கு: மருத்துவப் பயன்களும், எச்சரிக்கையும்

அடுத்த கட்டுரையில்
Show comments