Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் செய்ய...

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சப்பாத்தி - 4
முட்டை - 4
சிக்கன் - 250 கிராம் (எலும்பு நீக்கியது)
பெரிய வெங்காயம் - 2
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
மிளகு - கால் டீஸ்பூன்
சோம்பு, சீரகம் - கால் டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை - 2

 
செய்முறை:
 
சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி  கொள்ளவும்.
 
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள்  சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள்.
 
தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை  ஊற்றிப் பரப்பிவிட்டி அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, சப்பத்தியை அப்படியே பாய் போல மெதுவாக  சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும்  எண்ணெய் விட்டு, திருப்புவிட்டு வேகவிடுங்கள், இது வேக 5 நிமிடங்கள் ஆகும். வெந்த பிறகு சிறு துண்டுகள் போட்டுப்  பரிமாறுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments