Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவாடு ரசம் செய்திருக்கிறீர்களா?... இல்லைன்னா இதை படியுங்க...

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கருவாடு - 4 துண்டுகள்
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
வெந்தயம் - 1/2 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 2 பெரியது
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கீற்று
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு

 
செய்முறை:
 
மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி, பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீரில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு  போட்டு கலக்கி வைக்கவும். 
 
கடாயில் எண்ணய் ஊற்றி கருவாட்டை சற்று வறுத்து அந்த சட்டியிலேயே ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மீதமுள்ள எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, கரைத்து வைத்த ரசத்தை ஊற்றவும். கொஞ்ச நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லியை தூவி இறக்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments