Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாங்காய் ஆப்பிள்

ஷாங்காய் ஆப்பிள்
, திங்கள், 28 மே 2012 (16:58 IST)
தேவையான பொருட்கள் : -

ஆப்பிள் 4
முட்டை 1
மைதா 3 மேஜைக் கரண்டி
தண்ணீர் 1/4 லிட்டர்
சர்க்கரை 6 மேஜைக் கரண்டி
எள் 1 மேஜைக் கரண்டி
எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை : -

1. தோலையும், விதைகளையும் நீக்கிவிட்டு, ஆப்பிள்களை பெரிய சதுரங்களாக வெட்டவும்.

2. ஒரு பாத்திரத்தில் முட்டையையும், மைதாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிரமாகும் வரை வறுக்கவும்.

3. 1 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். 5 நிமிடமசமைக்கவும். அதில் வறுத்த ஆப்பிள் துண்டுகளையும், எள்ளையும் சேர்க்கவும்.

4. பிறகு தண்ணீரில் போட்டு குளிர வைக்கவும்.

5. குளிர்ந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil