Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெளுத்தி கபாப் ஃப்ரை

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2012 (14:06 IST)
கெளுத்தி மீன் வறுப்பதற்கு உகந்த மீன் வகையாகும். கெளுத்தி மீனை இங்கே குறிப்பிட்டிருக்கும் முறையில் சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.

தேவையானவை:

கெளுத்தி மீன் - 1 கிலோ
மசித்த இஞ்சி - 2 ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 3 ஸ்பூன்
தனியாதூள் - 4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
முட்டை - 1
எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த இஞ்சி, நசுக்கிய பூண்டு, தனியாதூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தயிர், முட்டை மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து அதில் மீன் துண்டுகளை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

மசாலாவுடன் கலந்த மீனை தவாவில் எண்ணெய் விட்டு பொரித்தால் சுவையான கெளுத்தி கபாப் ஃப்ரை ரெடி.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments