Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் நக்கட்ஸ்

Webdunia
புதன், 3 ஜூலை 2013 (15:55 IST)
FILE
தற்போது இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரப லமாக இருக்கும் பர்கர், பிட்ஸா பட்டியலில் சிக்கன் நக்கட்ஸுக்கும் இடம் உண்டு.

சிறிய உருண்டைகள் போல காட்சியளிக்கும் இவை பலரின் ஃபேவரைட் உணவாகும். மிகுந்த சுவையுடன் இருக்கும் இந்த சிக்கன் நக்கட்ஸ்சை அதே சுவையுடன் வீட்டில் எவ்வாறு செய்வது என்று பார்ப்போமா..

தேவையானவை

சிக்கன் - 1 கப்
மிளகுதூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பிரெட் தூள் - 1/2 கப்
சோள மாவு - 3 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப


FILE
செய்முறை

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அதனை மிளகு தூள், உப்பு, கரம் மசாலா ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் கலந்து மாவாக கரைத்துகொள்ளவும்.

அரைத்த சிக்கன் விழுதை சிறிய உருண்டைகளாக்கி அதனை சோள மாவில் நினைத்தப்பின்னர், பிரெட் தூளில் போட்டு சிறிது நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையாக சிக்கன் நக்கட்ஸ் ரெடி

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments