Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தான மட்டன் சூப்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2012 (21:05 IST)
" சூப்" பிரியர்களுக்கான சுவையான, சத்தான மட்டன் சூப் செய்முறை இதோ:

தேவையானவ ை:

மட்டன் (மார்கண்டம்) - 1/4 கிலோ
வெங்காயம் - 1/2 கப் (அரிந்தது)
தக்காளி - 2 கப் (அரிந்தது)
மிளகு - 4
அரிசி தூள் - 1 கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை, லவங்கம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

செ‌ற்முற ை:

தேவையான பொருட்களைத் தயார் செய்து வைத்ததும், மட்டனை நன்கு சுத்தம் செய்து ஒரு குக்கரில், அதனுடன் வெங்காயம், தக்காளி, ஊற வைத்து கழுவிய ஒரு கைப்பிடி அரிசி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து சரியான அளவு தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் அடங்கி, ஆவி போனதும், குக்கரைத் திறந்து மசாலா தண்ணீரை தனியே வடித்து எடுத்துகொள்ளுங்கள்.

இப்போது, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், பெருங்காயம், க‌ றிவேப்பிலையைப் போட்டு லேசான தீயில் வைத்து கருகிவிடாமல் தாளிக்கவும்.

பின்னர், ஏற்கனவே தனியே வடிகட்டி வைத்திருக்கும் மசாலா நீரில் இந்தக் கலவையைக் கொட்டி, அடுப்பில் ஏற்றி கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான மட்டன் சூப் ரெடி.

பொடியதாக நறுக்கிய கொத்தமல்லி தழையுடன், வெள்ளை மிளகு, தூள் உப்பை லேசாக மேலே பரப்பி பரிமாறினால் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.

இதில் மிளகு கலந்திருப்பதால், 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். சளித் தொல்லைக்கு சிறந்த மருந்து இது.

Summary : Mutton Ribs Soup is a very nutritious recipe. Healthy and Tasty Mutton Soup Recipe get it here. Mutton Soup is very good remedy for common cold & cough. Preparation Method of Tasty Traditional Mutton Soup Recipe.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments