Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறால் மசாலா ஊறுகாய்

இறால் மசாலா ஊறுகாய்
, திங்கள், 28 ஜனவரி 2013 (18:30 IST)
FILE
இறால் மசாலா ஊறுகாயை செய்துவைத்துகொண்டால், இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றுடனும் சேர்த்து சுவைக்கலாம்.

தேவையானவை

இறால்(சிறிது) - 300
அல்லது
இறால் (பெரியது) - 150
நல்லெண்ணெய் - 1/2 கப்
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 3 ஸ்பூன்
பூண்டு - 3 ஸ்பூன்
இஞ்சி (நறுக்கியது) - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சக்கரை - 1 ஸ்பூன்
வினிகர் - 2 கப்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை

இறாலை நன்கு சுத்தம் செய்து, 1 ஸ்பூன் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து தவாவில் வதக்குங்கள். வதக்கிய இறாலை மிதமான தணலில் நல்லெண்ணையில் பொறித்தெடுக்கவும்.

வெந்தயத்தை சிறிதளவு வினிகரில் ஊறவைத்து இதனுடன்.கடுகு, சீரகம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை அரைக்கும்போது தண்ணீருக்கு பதிலாக வினிகரை பயன்படுத்தவும்

ஒரு தாவாவில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, அரைத்த மசாலா,உப்பு, சிறிதளவு வினிகர், பொறித்தெடுத்த இறால் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். மசாலா கலவை நன்றாக வதங்கி, கெட்டிப்பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி இறுதியாக சக்கரை சேர்க்கவும்

இறால் மசாலா ஊறுகாய் ஆறியபிறகு, அதனை ஈரமில்லாத பாட்டில்களில் சேமித்துவைக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil