Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சுவாதியை வேடிக்கை பார்த்த கையாலாகாத கோழைகள் மீது கோபம் வருகிறது’ - மருத்துவர் ருத்ரன்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (16:29 IST)
சுவாதி கொலையின் குரூரத்தைவிடவும் வேடிக்கை பார்த்த கையாலாகாத கோழைகள் மீது கோபம் வருகிறது என்று புகழ்பெற்ற மனநல மருத்துவர் ருத்ரன் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.



படுகொலை செய்யப்பட்ட சுவாதி
 
 
இது குறித்து அவரது முகநூல் பதிவு கீழே:
 
ஒரு முறை காஞ்சியிலிருந்து சென்னை திரும்பும்போது, சாலையோரம் ஒரு பெண் கதறிக்கொண்டிருந்தாள். இறங்கிப்போய் என்ன என்றால், பின்னுக்கு கைகாட்டினாள்>.அங்கே பார்த்தால் ஒரு கார் கவிழ்ந்து கிடந்தது, அதன் கீழிருந்து இரு கால்கள் நீட்டிக்கொண்டிருந்தன. மெதுவாய் கை துழாவி அவன் கைபிடித்துப் பார்த்தால் நாடி இருந்தது. பாதத்தில் சுரண்ட கட்டை விரல் அசைந்தது.
 
நிச்சயம் என்னால் காரை தூக்க முடியாது. உமாவை சாலையில் நின்று போகும் கார்களை நிறுத்தச் சொன்னேன். ஐந்தாறு கார்களுக்குப் பின் ஒன்று நிற்க வந்தவரும் அதைத்தூக்க முடியாதவர் தான். ஓர் இளைஞன் பைக்கிலிருந்து இறங்கினான். மெல்ல சிலர் கூடினர்.
 

மனநல மருத்துவர் ருத்ரன்
கார் தூக்க, அடிபட்டவரை மிக மெதுவாய் அடியிலிருந்து நகர்த்தி, மூச்சும் நாடியும் சரியாக இருப்பதைப் பார்த்து, அவரிடம் பேச்சு கொடுத்தேன், கூட இருந்த பெண்களை கண்டிப்புடன் தயார்படுத்தினேன், ஆம்புலன்ஸ் வந்தது என் வேலை முடிந்தது. நாங்கள் நிறுத்திப் பார்ப்பதற்குமுன் பல கார்கள் போயிருந்தன, பின்னும் போயின.
 
நுங்கம்பாக்கத்தில் நான் இருந்திருந்தால்.... ஒன்றும் கிழித்திருக்க முடியாது. ஆனால் முதல் ஆள் அருகில் சென்றால் அடுத்து சிலர் வந்திருப்பார்..
 
சுவாதி கொலையின் குரூரத்தைவிடவும் வேடிக்கை பார்த்த கையாலாகாத கோழைகள் மீது கோபம் வருகிறது.

நன்றி : RK Rudhran

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments