Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராக்கிங் கொடுமைக்கு ஆளான மாணவிக்கு அரசு வேலை

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (11:27 IST)
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங்  படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவியை அவருடன் இருந்த 4 சீனியர் மாணவிகள் பினாயிலை குடிக்க வைத்து கொடுமை படுத்தினர்.
 

 
இதனால் மாணவியின் உணவு குழாய் பதிக்கப்பட்டது. வயிற்றுவலியால் துடித்த மாணவியை உறவினர்கள் ஊருக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த 4 மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் லட்சுமி, ஆதிரா, விஷ்ணு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தப்பித்துவிட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியை மாநில பிற்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மந்திரி ஏ.கே.பாலன் சந்தித்த பிறகு, அந்த மாணவிக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும். படிப்பு முடிந்ததும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments