Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜை முறைக‌ள்

Webdunia
webdunia photoWD
நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன ் 9 நா‌ட்களு‌ம ் ஒ‌வ்வொர ு அ‌ம்‌பிகை‌க்கு‌ம ் ஒ‌வ்வொர ு ‌ விதமா ன ம‌ந்‌திர‌ங்க‌ள ் சொ‌ல்‌ல ி பூ‌‌ஜி‌க் க வே‌ண்டு‌ம ்.

அவ‌ற்ற ை இ‌ங்க ு தொகு‌த்து‌ள்ளோ‌ம ்.

முதல் நாள்:

மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

இரண்டாம் நாள்:

இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

மூன்றாம் நாள்:

துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா ச ஹ‌ ஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம்.

நான்காம் நாள்:

ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா ‌ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸ ர‌ ஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.

ஐந்தாம் நாள்:

லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.



ஆறாம் நாள்:

லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹ‌ஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.

ஏழாம் நாள்:

ஸ்ரீ ச ர‌ஸ ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ சாரதா புஜங்க ம‌ந்‌திர‌ம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.

எட்டாம் நாள்:

ச ர‌ஸ ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.

ஓன்பதாம் நாள்:

ச ர‌ஸ ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

கன்னிகா பூஜை

நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம்.

முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவில் வெண்ணெய் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி முடிவு..!

வெயில் காலத்தில் நன்மை செய்யும் வெங்காயம்.. தினமும் சாப்பிடுங்கள்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Show comments