Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெமிக்கல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கும் கருப்பட்டி!!

Webdunia
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச் சத்துகளும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி.
கருப்பட்டி கெமிக்கல்கள் ஏதும் சேர்க்காமல் இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள்  முழுமையாக உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
 
கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். காபி, டீயில் கருப்பட்டியை  சேர்த்துக் கொள்வதனால்,  மூக்கடைப்பில் இருந்து விடுதலை அளிப்பதோடு, தொண்டை புண்ணையும் சரிசெய்யும்.
 
கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும்  காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். 
உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெறச்  செய்யும்.
 
கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை  வராமல் தடுக்கும்.
 
கருப்பட்டியை ஒருவர் தொடர்ச்சியாக எடுத்து வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments