Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரெல்லாம் இஞ்சி டீயை அதிகமாக குடிக்கக் கூடாது...?

Webdunia
வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை  ஏற்படுத்திவிடும்.
அன்றாடம் அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும். 
 
இஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே குறைவான ரத்த அழுத்தம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
 
பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.
 
நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments