Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவை உண்ணும்போது கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியவைகள்...!!

Webdunia
பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உனவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும்.
பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உடலெங்கும் வலி, நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம், புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூலம், மாரடைப்பு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுத்தும்.
 
நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். பல் முளைத்த குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பதை நிறுத்தினாலே நன்கு பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடும்.
 
சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது நமது உள்ளுறுப்புக்கள் தூண்டப்பட்டு அவை உணவை கிரகித்துக்கொள்ள தயாராகிவிடும். உணவில் ஆறு சுவைகள் (இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்) இருக்குபடி  பார்த்துகொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த சுவையையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
 
திட ஆகாரமாக இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக இருந்தாலும் சரி நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். சுவை நாக்கால் உறிஞ்சப்பட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சுவையாகவே  இரைப்பைக்கு செல்லும் உணவு தான் நமது உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
 
உணவை பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். கால்களைத் தொங்க வைத்துக் கொண்டோ, நின்றுக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க  வேண்டும்.
 
சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதற்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments