Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன...?

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (17:29 IST)
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஹார்மோன் அளவு மாறுதல், சிறுநீரகக் பாதிப்புகள், சிறுநீரகத்துக்குக் குறைவான இரத்தம் செல்லுதல், இதய தமணி சுருங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.


மனகவலை, பதற்றம், பயம், படபடப்பு, மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். உணவில் அதிகமாக உப்பு  சேர்த்து கொள்வதால் அதிகமான அதிகபடியான உப்பு இரத்தத்தில் கலக்கிறது.  இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முயல்கிறது.  இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.

வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை சாப்பிட வேண்டும். முதலில் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைந்த பிறகு அடுத்தவேளை உணவு அருந்துவது நல்லது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உணவு சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக்கூடாது. இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு.  

இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இரத்த அழுத்தம் நோய் வராமல் ஏற்படாமல் தடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments