Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு கிராந்தி மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன...?

Webdunia
விஷ்ணு கிராந்தி மூலிகையை சாப்பிடுவதால் அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் காய்ச்சல் விலகி போகும். இளைத்த சருமம் கொழுகொழுப்பாய் மாறும் மற்றும் கண்பார்வை, சுவாசத்தை சீராக்கும்.

விஷ்ணுகிராந்தியை மூலிகையை வேரோடு எடுத்து தினமும் நெல்லிக்காய் அளவு எடுத்து, பாலில் அரைத்து சாப்பிட்டால் மறந்து போன நினைவுகள் திரும்பவும்  வரும்.
 
விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர ஒருமல், சளி, உட்சூடு, காய்ச்சல் முதலியவை குணமாகும்.
 
விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நோய் குணமாகும்.
 
விஷ்ணு கிராந்தி இலையை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியாகும். சீதபேதி குணமாக விஷ்ணு கிராந்தி வேர், இலை, தண்டு, பூ என அனைத்தையும் அரைத்துக் பாக்கு அளவு தயிரில் கொடுக்க குணமாகும்.
 
விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உடல் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும்.
 
டெங்கு காய்ச்சல் குணமாக சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு,  பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
 
இந்தப்பொடியை விஷ்ணுகிராந்தி வேர் - 6, கீழாநெல்லி வேர் - 6, ஆடாதொடை இலை - 8 ஆகிய மூலிகைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இந்த மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு இதை ஒரு லிட்டராகச் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி  தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து பருகலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments