Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலர்ந்த திராட்சையில் உள்ள வைட்டமின்கள் என்ன...?

Webdunia
திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. 

எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை அற்புதமான மருந்தாகும்.
 
காலையில் திராட்சைப்பழச்சாறு குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும், கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை பழமாகவோ,  ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும். 
 
வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ள கர்ப்பிணிகள், திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்களும், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிடலாம். 
 
உலர்ந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. எலும்பு மஜ்ஜைகளிலிருந்து, ரத்தம் ஊறுவதற்கு, காய்ந்த திராட்சை உதவுகிறது. 
 
இப்பழத்தை எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து, ரத்தம் அதிகம் சுரக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
 
கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான, அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். மாதவிலக்கு காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இப்பிரச்னை தீர, கைகொடுக்கும் மருந்தாக, உலர்ந்த திராட்சை பயன்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments