Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் என்ன...?

Webdunia
ஏராளமான சத்துக்களையும் நோய் எதிர்ப்பு பொருள்களையும் கொண்டுள்ளது இந்த செர்ரி பழம். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இவை இரண்டுமே உடலுக்கு நல்லது. 

செர்ரி பழத்தில் இருக்கும் வைட்டமின் பி3 என்ற நியாசின் சத்து தோலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. கொழுப்பை கரைக்கிறது. பீட்டா கரோட்டின் இளைமையை புதுப்பித்து ஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிக்கிறது. போலிக் அமிலம் ரத்தசோகையை தடுக்கிறது. 
 
இப்பழத்தில் இருக்கும் போரான், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு மண்டலத்தில் உறுதியாக பாதுகாக்கிறது.
 
நரம்புக் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்க்கொள்பவர்கள் அடிக்கடி செர்ரி பழம் எடுத்துக்கொள்வது நல்லது. இது நரம்புகளில் உண்டான இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
 
செர்ரி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, எந்த ஒரு நோயும் உடலை தாக்காதவாறு ஒரு அரணாக பாதுகாத்து இருக்கும்.
 
செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வை குறைபாடு, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி செர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது கண்களுக்கு நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments