Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தழுதாழை இலையை பயன்படுத்தி நோய்களுக்கு நிவாரணம் பெற உதவும் வைத்தியங்கள் என்ன...?

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (14:40 IST)
மாந்தம், மூக்கடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கழலை, சொறி, சிரங்கு, கப மிகுதியால் ஏற்படும் காய்ச்சல், உடல்கடுப்பு, குடைச்சலை நீக்கும்.


தழுதாழை இலைச்சாற்றை காலை மற்றும் மாலைகளில் தலா இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அருந்திவந்தால், காய்ச்சல் நீங்கும்.

வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் தழுதாழை உள்ளது. பக்கவாதம் முதலான 80 விதமான வாதநோய்களைப் போக்கும் என்கிறது சித்த மருத்துவம். தழுதாழையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், `பாலவாதம்‘ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்படும் முடக்கநிலை நீங்கும்.

தழுதாழை இலைச்சாற்றை சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு தேக்கரண்டி உட்கொள்ள, மேக நோய்கள் நீங்கும்.

வாதத்தால் ஏற்படும் வலி நீங்க, இதன் இலைகளை ஒன்றிரண்டு கைப்பிடி அளவுக்கு எடுத்து, தேவையான அளவு நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில், வலி ஏற்பட்ட இடங்களில் ஊற்றிக் கழுவ வேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் தழுதாழை இலையை வதக்கி, வலி, வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டு போட்டுவர, பிரச்னை தீரும். இதன் இலையை ஆலிவ் எண்ணெய் விட்டு வதக்கி, விரைவாதம் மற்றும் நெறிகட்டிய இடங்களில் கட்டுப்போட, அவை குணமாகும்.

குறிப்பு: எந்த மூலிகையை மருத்தவமாக பயன்படுத்தம்போது, சித்தமருத்தவர் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments