Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வல்லாரை கீரையில் சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது...?

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (09:34 IST)
வல்லாரை கீரையின் இலை தண்டுகள், பூக்கள் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. வேர்கள் மற்றும் விதைகளிலிருந்தும் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


வல்லாரையின் இலைச்சாறு தினமும் 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும். ஆமணக்கு எண்ணெய்யில் வல்லாரை இலையை வதக்கி மேலே பரப்பி விட வேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரைகீரை இலைகளை பற்களின் மீது தேய்ப்பதால், மஞ்சள் கறை நீங்கி, பற்கள் மின்னும். பற்கள் ஈறுகள் வலுவடையும். வாய்புண் வாய்நாற்றம் நீங்க, வல்லாரைகீரை இலைகளை காலைவேளையில் மென்று தின்று வரலாம்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமமாக எடுத்து அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செய்து காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காய்ச்சலும் தீரும்.

வல்லாரை கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புசத்து,  தாதுஉப்புக்கள் உயிர்சத்து, விட்டமின் A,C அதிகம் உள்ளது. மூளைவளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுகிறது. வல்லாரை இலையுடன், கீழாநெல்லி இலையைச் சம எடையளவு சேர்த்து அரைத்து 5 கிராம் அளவு காலை வேளை மட்டும் தயிரில் கலந்து உண்டு வர நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை இலை, தூதுவளை ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர, காசநோயில் ஏற்படும் சளித்தேக்கம், தொண்டைக் கம்மல் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments