Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயிரில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும் தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். தயிரில் முக்கியமான  வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துக்களும் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

தயிரை தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத  விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது.
 
அல்சர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்சருக்குக் காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது.
 
தயிரை தினந்தோறும் உண்டு வந்தால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய்களுக்கான வாய்ப்பும்  குறைகிறது.
 
பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள்  வலுவடைகின்றன. மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது.
 
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட  பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.
 
தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்புத் திறன் தலைமுடியில் உள்ள பொடுகை அழிக்கும். எனவே தலையில் தயிரை சிறிது நேரம் தடவி, காய வைத்த பின்னர் கழுவி  வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவக் குணங்கள் நிறைந்த நாவல் மரம்: ஒரு முழுமையான பார்வை

சுவாசம் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனையா? சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை எப்போது எடுக்க வேண்டும்?

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments