Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (13:38 IST)
உடலில் உள்ள கொழுப்பு பொருள் அதிகமானால் அது வியர்வை மூலமாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் வெளியேறாமல் முகத்தில் தேங்கும். அந்த கொழுப்பு பொருட்களே பருவாக உருமாறுகின்றன.


முகம் கழுவாமல் பவுடர் போட்டாலும் பரு வரும். பரு வந்து விட்டால் அதை நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது. சிலர் பருவை கிள்ளி விடுகின்றனர். அவ்வாறு செய்தால் பரு மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.

பரு வந்து விட்டால் அதை கிள்ள கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது.

பரு உருவாக இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல். இந்த மலச் சிக்கலை போக்க தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர ஒருநாளைக்கு குறைந்தது எட்டு டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அடிப்படையில் ஆரோக்கியமான தூக்கத்தை கடை பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளித்து அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments