Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றாட உணவில் வாழைக்காய் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்....?

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (14:51 IST)
வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.


மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.

வாழைக்காயில் விட்டமின் ஏ, சி, பி6 ஆகியவை அதிகளவு உள்ளன. மேலும் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள், இ, கே முதலியவை காணப்படுகின்றன.

வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து,  நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும் மாவுச்சத்தும் உள்ளது.

பசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு. மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

புதினாவை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments