Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்ன பயன்கள்...?

Webdunia
வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் பி குருப் வைட்டமின் ஆகும்.

சிறிய வெங்காயமோ அல்லது பெரிய வெங்காயமோ இரண்டும் ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை அளிக்கும் தன்மை வாய்ந்தது. வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வெங்காயத்தில் உள்ள நறுமணம், சுவை மற்றம் மருத்துவ குணம் முழுமையாக கிடைக்கிறது.
 
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும். இரத்தம் விருத்தியாக தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட வேண்டும்.
 
செரிமானம் அடைய தினமும் வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது மற்ற உணவுகளுடன் கலந்தோ சாப்பிட்டால் செரிமானம் பிரச்சனைகள்  குணமாகும்.
 
காய்ச்சல், சிறுநீரக கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸியில் அரைத்து இரசமாக வைத்து அருந்தினால் குணமாகும்.
 
வெங்காயம் உடலுக்கு குளிர்சி அளிக்கும் மருந்து என்பதால் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 100 கிராம் வெங்காயத்தை  தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments