Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்...?

Webdunia
வெண்டைக்காய் அவித்து சமையலில் சேர்த்துக்கொள்ள மலச்சிக்கல் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் தீர்ந்துவிடும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால் வெண்டைக்காயை சாப்பிடுங்கள். 

உடல் பருமனாக இருப்பவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க வேண்டும் என்று எண்ணுவோர் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிட்டால் கொழுப்புகள் வெளியேற்றப்படும்.
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது வராமல் தடுக்க நினைப்பவர்கள் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் முக்கியமான ஒன்று வெண்டைக்காய் தான், இதை சாப்பிட்டு வர உடலிலுள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
 
வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. இதய நோய்களுக்கும் வெண்டைக்காய் மிகவும் நல்லது, அதிலுள்ள சத்துக்கள் இதயத்திற்கு சென்று வலுவூட்டக் கூடியது. 
 
வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
 
நிறைய பேருக்கு உடல் எடையை விட எலும்புகளின் இடையே அதிகமாக இருக்கும் அதற்கு காரணம் இந்த வெண்டைக்காய் தான். மூச்சு உள் இழுத்தல்,  வெளியிடுதல் தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் பயனுள்ளதாக வெண்டைக்காய் உள்ளது. 
 
கண்களில் குறைபாடு இருந்தால் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை நன்கு தெரியும், எவ்வித குறையும் இல்லாமல் இருக்கும். கண்பார்வை குறைபாடு வராமல் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments