Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழை இலையில் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?

Webdunia
வாழை இலையில் சாப்பிடுவது என்பது, தமிழர்களுக்கே உள்ள தனிப்பெருமை. விருந்துகளில் அல்லது அன்ன தானங்களில் வாழையிலையில் உணவு உண்பது தமிழர்கள் தொன்று தொட்டு பழகி வந்த வழக்கம்.

தமிழர்கள் மற்ற நேரங்களை விட அதி முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர்.
 
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
 
நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.
 
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
 
வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடிக்கடி வரும் ஏப்பம்: காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை: நன்மைகளும், தவறான பழக்கங்களும்!

மருத்துவக் குணங்கள் நிறைந்த நாவல் மரம்: ஒரு முழுமையான பார்வை

அடுத்த கட்டுரையில்
Show comments