Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேப்ப இலை சாற்றை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

Webdunia
ஆயுர்வேதத்தில் வேம்பு, ஒரு அதிசய மரமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தின் வேர், பழம், இலை, பட்டை என ஒவ்வொரு பகுதியும் மருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. 

வேப்ப இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். பொடுகு, முடி உதிர்தல் பிரச்சினையை போக்குவதற்கு வேப்ப இலை சாறை தலையில் தடவலாம். பருகவும் செய்யலாம்.
 
வேப்ப இலை சாறு மலேரியாவுக்கு காரணமான வைரஸை வளரவிடாமல் செய்துவிடும். வேப்ப இலை சாறுடன் தேன் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்தும் விடுபடலாம். வேம்பு ரத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். கல்லீரலுக்கும் வலிமை சேர்க்கும்.
 
வேப்ப இலை சாறு செரிமானம் சீராக நடைபெற துணைபுரியும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். பிரசவத்திற்குப் பிறகு வேப்ப இலை சாறை சில நாட்கள் பருகிவந்தால் நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
 
தினமும் வேப்ப இலை சாறு குடித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு போன்ற நோய்கள் நெருங்காது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே இதை பருக வேண்டும்.
 
வேப்பம் பூக்களை நன்றாக உலர வைத்து, தூளாக்கி காபியாக தயாரித்து பருகி வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். வேப்பங்குச்சி பற்களில் காணப்படும் கிருமிகளை அழித்துவிடலாம். வேப்பம் பட்டை பற்களின் ஈறுகளை வலிமையாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments