Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மைகள்...?

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (09:22 IST)
கற்றாழையை  செடியிலிருந்து அப்படியே எடுத்து பயன்படுத்த கூடாது. ஏனெனில் அதில் ஒரு நச்சு பொருள் உள்ளது. எனவே நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும்.


கற்றாழையை எலுமிச்சை சாறுடன் சேர்த்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர பொடுகு பிரச்சனை குறையும். கற்றாழை சாற்றை உதட்டில் தடவி வர வெடிப்பு  முதலியன நீங்கி உதடு மென்மையாகும்.

கற்றாழை சாறு அல்லது கற்றாழை ஒன்று  இரண்டு துண்டுகளை வெறும் வயிற்றில் தவறாமல் உட்கொள்வது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. எனவே இது முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது மற்றும் சருமத்தை பளபளபாக்க உதவுகிறது.

கற்றாழை சாறுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து வெறும் வயிற்றில் தவறாமல் எடுத்துக்கொள்வது எடை குறைக்க உதவுகிறது.

கற்றாழை துண்டுகளை சாப்பிடுவதால் அல்லது கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் கொழுப்பும் குறைகிறது.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்து, முகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments