வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு தெரியுமா...!

Webdunia
வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும்.
வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. 
 
வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம்  மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
 
வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். மேலும் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.
 
சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும். மேலும் தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு  துணையாக நிற்கும். 
 
வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
 
உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

அடுத்த கட்டுரையில்
Show comments